/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
/
மகளிர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
ADDED : டிச 19, 2025 05:58 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வணிக நிர்வாக துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
எச்.டி.ஜி.இ., டெக்னாலஜீஸ் பிரைவேட் லிட்., தலைமை நிர்வாக அதிகாரி அரிகரன், 'தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர்களுக்கான ஐ.பி.ஆர்., முக்கியத்துவம் குறித்த துவக்க பட்டறைகள்' தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில், டிஜிட்டல் மார்கெட்டிங் குறித்த முக்கிய அம்சங்களும், துவக்க பட்டறைகளின் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் கருவிகள், ஆன்லைன் விளம்பரங்கள், சமூக ஊடகங்களின் பங்கு எவ்வளவு அவசியமானது பற்றி கூறினார்.
வாடிக்கையாளர் இலக்கு நிர்ணயம், பிராண்டு உருவாக்கம், மார்கெட்டிங் பின்னல், விற்பனை திட்டமிடல், தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அடைவது ஆகிய முக்கிய விற்பனை மற்றும் மார்கெட்டிங் உத்திகளும் விளக்கப்பட்டது. முன்னதாக, உதவி பேராசிரியைகள் வாசுகி, தேவி ஆகியோர் வரவேற்றனர். இதில், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சிலம்பரசி ராஜூ நன்றி கூறினார்.

