ADDED : அக் 26, 2024 07:44 AM
செஞ்சி: வல்லம் அடுத்த மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடையந்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பத்மஷா தலைமையில் மருத்துவர்கள் இளங்கோவன், இந்திரா உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட சுகாதார தொழில் நுட்ப உதவியாளர் அன்பரசன். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ்வந்த், ஆனந்த் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கொசு புழு தடுப்பு பணியாளர்களின் பணிகளை பார்வையிட்டனர்.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, கை கழுவும் முறை, தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் எனவும், காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.
ஊராட்சி தலைவர் கல்பனா, துணைத் தலைவர் வேண்டாமிருதம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.