/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்
ADDED : அக் 16, 2025 11:25 PM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
செஞ்சியை அடுத்து ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட சமூக ஊடகம் அறிவியல் வளர்ச்சியா, கலாசார வீழ்ச்சியா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
கல்லுாரி தாளார் ரங்கபூபதி தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். கவிஞர் சினேகன் நடுவராக பட்டிமன்றத்தை நடத்தினார்.
நிகழ்ச்சியில் கன்னிகா, கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சி.இ.ஓ., மணிகண்டன் நன்றி கூறினார்.