/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
/
மயிலம் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : ஜன 20, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் தை மாத சஷ்டியை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.
அதனையொட்டி காலை சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, வழிபாடு நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜை நடந்தது.
பாலபிஷேகம், மகா தீபாரதனையை தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து மதியம், சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு உற்சவர் கிரிவலம் நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.