/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சிகளில் இன்று முதல் வரி வசூல் சிறப்பு முகாம்கள்
/
ஊராட்சிகளில் இன்று முதல் வரி வசூல் சிறப்பு முகாம்கள்
ஊராட்சிகளில் இன்று முதல் வரி வசூல் சிறப்பு முகாம்கள்
ஊராட்சிகளில் இன்று முதல் வரி வசூல் சிறப்பு முகாம்கள்
ADDED : செப் 19, 2024 11:15 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில், இன்று முதல் 3 நாட்கள் வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதியிலும், வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரியை நிர்ணயம் செய்தல். குடிநீர் இணைப்பு காப்புத் தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் வசூலித்தல். ஊராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி ஊராட்சித் தலைவரின் கடமைகளில் முக்கியமானது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தி வரி வசூல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி இன்று 20ம் தேதி, 21 மற்றும் 23ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, 2023-2024 மற்றும் 2024-2025ம் நிதி ஆண்டுகளின் வீட்டுவரி, சொத்து வரி, குடிநீர் இணைப்புக்கான டிபாசிட் தொகை மற்றும் குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட இதர வரி இனங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.