/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : செப் 05, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திகுறிப்பு:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, வரும் 7ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அந்த ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் வரும் 7ம் தேதி காலை 10:10 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு 11:45 மணிக்கு சென்றடையும். திருவண்ணாமலையில் மதியம், 12:45 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.
இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்துார், திருக்கோவிலுார், ஆதிச்சனுார், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.