ADDED : ஜன 04, 2026 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் சட்டசபை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
தலைமை தேர்தல் ஆணையம், தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கடந்த மாதம் 27, 28 சிறப்பு முகாம்களை நடத்தியது.
இதேபோல் திண்டிவனம் சட்டசபை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
இதில் 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
தொகுதியிலுள்ள கீழ்சிவிரி, பெருமுக்கல், ஓமந்துார் உள்ளிட்ட முகாம்களை உதவி வாக்காளர் பதிவு தாசில்தார் நீலவேணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல ஓமந்துாரில் நடந்த சிறப்பு முகாமை, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி பார்வையிட்டார்.

