/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்
/
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்
ADDED : நவ 15, 2024 04:56 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலகங்களில், சிறப்பு முகாம்களின் போது மனு கொடுக்கலாம்.
இதற்காக மாவட்டத்தில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 16, 17 மற்றும் 23, 24 தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.