/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2025 04:40 AM

விழுப்புரம்: தமிழ் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்ட கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கோலியனுார் வரதராஜபெருமாள் கோவிலில், காலை 7.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதேபோல், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆதிவாலீஸ்வரர் கோவில், தேரடி விநாயகர் கோவில், கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி:
செஞ்சி காந்தி பஜார் செல்வவிநாயகர் கோவிலில் காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரமும், மகா தீபாரதனை நடந்தது.
பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாள், வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
அதைத் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஜனனி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்பாபு, பரதநாட்டியம் நிகழ்த்திய மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரமும், வடைமாலை சாற்றி மகா தீப ஆராதனை நடந்தது.