/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2025 06:54 AM

விழுப்புரம்: ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்துவர்கள் பலர் பங்கேற்றன்ர.
நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிழக்கு பாண்டி ரோடு தேவநாதசுவாமி நகர், ரயில்வே குடியிருப்பு உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.01 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
குபேர கோவில் வழிபாடு: திண்டினம்-புதுச்சேரி ரோட்டிலுள்ள மொளசூரில் உள்ள லட்சுமி குபேர கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு குபேரருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்த குபேரர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வானுார்: இரும்பை மகாகாளேஸ்வரர்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் நடந்தது. காலை 6;00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு அபிேஷகங்கள் நடந்தது.
திருவக்கரை: திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு, காலை 6;00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிேஷகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

