ADDED : மே 21, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஆவுடையார்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, ஆர்.சி., மேலக்கொந்தையை சேர்ந்த செல்வக்குமார், 28; என்பவர் பைக்கில் அதிவேகமாக சென்று பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் வந்தது தெரியவந்தது. உடன், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
