ADDED : ஜூன் 13, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் பிரித்திவி ராம் மற்றும் போலீசார், வெட்டுக்காடு வள்ளலார் மடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது விக்கிரவாண்டி அடுத்த அதனுார் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் மகன் ஆகாஷ், 25; பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்றார். போலீசார், அவரை பிடித்து, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
