/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
/
அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
ADDED : மார் 15, 2025 08:36 PM

திண்டிவனம்; திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
சந்தைமேடு, தாகூர் கல்வி சங்க தலைமை அலுவலக மைதானத்தில், காமாட்சி விலாஸ் நடுநிலைப்பள்ளி, முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, காந்தி நிதியுதவி பெறும் ஆரம்ப பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
ஒலக்கூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். போட்டிகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன், வட்டார வளை மைய மேற்பார்வையாளர் அருணா முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலர் சதீஷ் பரிசு வழங்கினார்.
விழாவில் தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கங்கா ராஜாபாதர், செயலாளர்கள் ரபீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர் மற்றும் தலைமையாசிரியர்கள் ராமதாஸ், சந்திரசேகரன், கிரிஜா உட்பட பலர் பங்கேற்றனர்.