/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள்
/
காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள்
ADDED : ஜன 17, 2025 06:41 AM

விழுப்புரம்: தமிழர் திருநாள் மற்றும் காணும் பொங்கலை யொட்டி, விழுப்புரத்தில் மகளிர், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், நேற்று காலை 10.00 மணி முதல் சிறுவர்களுக்கான கபடி, சாக்கு ஓட்டம், குறைந்தவேக சைக்கிள், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டி கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
இதில், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கீழ்பெரும்பாக்கம் தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.
அதே போல், யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச்சங்கம் மற்றும் கீழ்பெரும்பாக்கம், திருவாசக தெரு நண்பர்கள் இணைந்து 11ம் ஆண்டு தை திருவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில், ஓவியம், கட்டுரை, பேச்சு, கைக்குட்டை எடுத்தல், பலுான் தாங்கி ஓடுதல், சமத்துவ பொங்கல், உரியடித்தல், கயிறு இழுத்தல், மல்லர் கம்பம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை சுபஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார்.