/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம்
/
அரசு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம்
ADDED : டிச 10, 2024 07:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு விடுதி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன் சார்பில், மாவட்ட விடுதி யில் தங்கி கபடி, கைப்பந்து மற்றும் மல்லர் கம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் 59 மாணவர்களுக்கு பேக், ஸ்மார்ட் வாட்ச், டவல், கேப், டீ, வாட்டர் பாட்டில், ஹாட் பேக் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 'கிட்'டை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆலிவ்வாசன், மண்டல முதுநிலை மேலாளர் நோயிலின் ஜான் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.