/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ் கல்லுாரியில் விளையாட்டு விழா
/
தமிழ் கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : ஜன 13, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் ; மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொங்கல் வைத்து படைத்தனர்.
பின்னர் கல்லூரி மைதானத்தில் கோலப்போட்டி உறி அடித்தல், கபடி, சிலம்பம், கிராமிய நிகழ்ச்சிகளை நடித்து காண்பித்தார்கள். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் அனைவரும் பாரம்பரிய வேட்டி சேலை அணிந்திருந்தனர்.