
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சோழகனுார் சரஸ்வதி எக்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'விளையாட்டு விழா 2024' நடந்தது.
பள்ளி முதல்வர் இந்துமதி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் யமுனாராணி, அறங்காவலர்கள் முத்துசரவணன், சிதம்பரநாதன், தமிழரசன், முத்து சீனுவாசன் முன்னிலை வகித்தனர். தாளாளர் ராஜசேகரன் வரவேற்றார்.ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்அமீது சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.முன்னதாக, பள்ளி சேர்மன் ரவீந்திரன், பேசினார்.
கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் முத்துசிவஞானம் செய்திருந்தார்.