/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா
/
விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : டிச 10, 2025 06:18 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி அரங்கம் அமைக்கும் பணியினை நேற்று காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அவலுார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் பத்மஜா தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் கண்மணி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின் அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், ஏகாம்பரம், தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் தேவராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

