/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்
/
பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்
பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்
பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்
ADDED : ஜன 23, 2025 05:38 AM
வானூர்: வானூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், கிராம பஞ்சாயத்திற்கு, தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.
வானூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராம பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் படி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராங்களான உப்புவேலூர், தலகாணிகுப்பம், கேணிப்பட்டு, ஆகாசம்பட்டு, கரசானூர், குன்னம், நெமிலி, திருவக்கரை, அம்புழுக்கை, ஐவேலி, பொம்பூர், எறையூர், கடகம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக ஆகாசம்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட தெளிப்பான்களை மானிய விலையில் வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்ததிராஜ் வழங்கினார்.