/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ சத்ய சாய் சேவா டிரஸ்ட் இலவச பிசியோதெரபி மையம்
/
ஸ்ரீ சத்ய சாய் சேவா டிரஸ்ட் இலவச பிசியோதெரபி மையம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா டிரஸ்ட் இலவச பிசியோதெரபி மையம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா டிரஸ்ட் இலவச பிசியோதெரபி மையம்
ADDED : பிப் 15, 2024 11:29 PM

விழுப்புரம் வேலா தொண்டு நிறுவனத்தில், ஸ்ரீ சத்ய சாய் சேவா டிரஸ்ட் சார்பில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இலவச பிசியோதெரபி மையம் துவக்கப்படுகிறது. விழுப்புரம் வேலா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் ரோட்டரி மோகன் கூறியதாவது:
விழுப்புரத்தில், கடந்த 1992ம் ஆண்டு வேலா தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டது. தொடர்ந்து, நிறுவனம் மூலம், 2014ம் ஆண்டு வரை பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான உணவு, தங்குமிடத்துடன் இலவச சிறப்புப் பள்ளி, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது.
பின், இளம் காது கேளாத குழந்தைகள் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்ப கால தலையீட்டு மையம், 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு வேலா சிறப்பு பள்ளி, நடுநிலைப் பள்ளியாகவும், 2002ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2014ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.
விழுப்புரத்தில், 2019ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றியோர் இல்லமும், 2020ம் ஆண்டு தசை நார் சிதைவு திட்டமும் துவங்கியது.
தற்போது, விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தில் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் வேலா தொண்டு நிறுவன வளாகத்தில், 56 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், இலவச பிசியோதெரபி மையம் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய டிரஸ்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ள, இம்மையத்தை, வரும் 21ம் தேதி, டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி ராஜ்குமார் திறந்து வைக்கிறார்.
இந்த இலவச பிசியோதெரபி மையத்தில், எலும்பு முறிவு, பக்கவாதம், பெருமூளை வாதம், முடக்குவாதம், இதய மற்றும் நுரையீரல் கோளாறுகள், மூட்டு தேய்மானம், சவ்வு விலகுதல், முகவாதம், தண்டுவடம் பிரச்னை, தசைநார்தேய்வு உள்ளிட்டபிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.