/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜன 22, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி, வேத மந்திரங்கள் வாசித்தலும், தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
20ம் தேதி காலை 7:00 மணிக்கு புனித தீர்த்தம் கொண்டு வருதல், மஹா கும்பம், திரவிய பூஜை, நித்ய ஹோமங்கள் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் 21ம் தேதி காலை 8:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி 10:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.