தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் நகரில் 300 டன் குப்பைகள்... தேக்கம்  :மெகா கிளீனிங் கேம்ப் அமைக்கப்படுமா?

விழுப்புரம் நகரில் 300 டன் குப்பைகள்... தேக்கம்  :மெகா கிளீனிங் கேம்ப் அமைக்கப்படுமா?

விழுப்புரம் நகரில் 300 டன் குப்பைகள்... தேக்கம்  :மெகா கிளீனிங் கேம்ப் அமைக்கப்படுமா?


UPDATED : ஜூலை 11, 2026 03:47 AM

ADDED : ஜூலை 10, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2026 03:47 AM ADDED : ஜூலை 10, 2026 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் குப்பைகளை ஸ்டாக் வைக்க போதிய இடமின்றியும், ஏற்றியனுப்புவதில் தாமதத்தாலும், நகரில் 300 டன் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு தொடர்கிறது. விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டுகளிலிருந்து, தினசரி 15 முதல் 20 டன் அளவில் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் மூலம் சேகரித்து ஒப்பந்த நிறுவனத்தினர் நகராட்சியிடம் ஒப்படைக்கின்றனர்.

இவை நகரில் உள்ள நுண்ணுர மையங்களில் வைத்து தரம்பிரித்து, மக்கும் குப்பைகள் உரமாக மாற்றவும், மக்காத பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் லாரி மூலம் சிமெனட் ஆலைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் சேகரமாகும் குப்பைகள் முழுமையாக அப்புறப்படுத்த வழியின்றி பல இடங்களில் குவித்து வைத்தும், குப்பை கொட்டுவதற்கு போதிய இடவசதியின்றி நெடுஞ்சாலையோரம், ஏரி, குளம் பகுதிகளிலும் கொட்டப்படுகிறது.

சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், 'விழுப்புரம் நகரில், ஏற்கனவே நிரந்தரமாக குப்பை கொட்டி வந்த திட்டம் கைவிடப்பட்டு, தினசரி சேகரமாகும் குப்பைகள் தனியார் நிறுவனம் மூலம் பெறப்படுகிறது. ஒப்பந்த நிறுவனத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வாங்காமல், ஒரே விதமாக மினி டெம்போக்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகள் மாம்பழப்பட்டு சாலை, எருமனந்தாங்கல் ஏரி, சாலாமேடு பொன்னேரி, எல்லீஸ்சத்திரம் சாலை, நகராட்சி மைதானம் போன்ற இடங்களில் வைத்து, தரம் பிரித்து 8 முதல் 10 டன் வரையே சிமென்ட் ஆலைக்கு அனுப்புகின்றனர். இதில், நகராட்சி மைதானத்தில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடவசதியின்றி, வழுதரெட்டி, காகுப்பம் ஏரிகளிலும், பைபாஸ் சாலையோரங்களிலும் பல இடங்களில் குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனத்தினருக்கு எடை (டன்) கணக்கில் தொகை வழங்கப்படுவதால், அவர்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல், பிளாஸ்டிக், கல், மரம், மண், மின்சாதன குப்பைகள் என ஒன்றாக எடுத்து வந்து கொடுக்கின்றனர். இதனை பிரித்து அகற்ற முடியாமல் பல இடங்களில் 300 டன் வரை குப்பைகள் தேங்கியுள்ளது.

அதிகளவில் தேங்கிய குப்பைகளை மாஸ் கிளீனிங் கேம்ப் அமைத்து, குப்பைகளை முழுதும் அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ஷியாமளாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், 'நகரில் தினசரி 10 டன் குப்பைகள் வருகிறது. அதனை தரம் பிரித்து, நுண்ணுர மையங்களில் உரமாக்குகிறோம். மக்காத குப்பைகளை அரியலுார் பகுதி சிமென்ட் ஆலைக்கு ஏற்றி அனுப்புகிறோம். தினசரி 8 டன் அளவில் லாரியில் குப்பைகள் அனுப்பி வைக்கிறோம்.

கூடுதல் லாரி வசதியில்லை. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பணிமனைகளின் குப்பைகள் தற்போது அதிகரித்துள்ளது. அதனை தரம் பிரித்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனியார் லாரி மூலமும் அனுப்புகிறோம். ஏற்கனவே கடந்த 2023-25ம் ஆண்டில் தேக்கி வைத்திருந்த பழைய குப்பைகளும் அகற்றப்பட்டு வருகிறது. விரைவில் குப்பைகள் தேக்கமின்றி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us