/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2025 07:27 AM

செஞ்சி: வல்லம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில் நடந் தது. பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும், வரவு செலவு குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இதில் பேசிய ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றியத்தில் வரும் 17ம் தேதி முதல் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கிராம மக்களிடம் எடுத்து கூறி பயனடைய செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அமிர்தம், இந்துமதி, கோமதி, ராஜேந்திரன், ஏழுமலை, கோபால், பத்மநாபன், கம்சலா, பிரபாகரன், கலைவாணி, சிலம்பரசி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலாளர் முத்துவேல் நன்றி கூறினார்.