/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு நடுக்கம்: சண்முகம் எம்.பி., கிண்டல்
/
தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு நடுக்கம்: சண்முகம் எம்.பி., கிண்டல்
தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு நடுக்கம்: சண்முகம் எம்.பி., கிண்டல்
தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு நடுக்கம்: சண்முகம் எம்.பி., கிண்டல்
ADDED : ஜூலை 18, 2025 05:05 AM
விழுப்புரம்: பொதுத்தேர்தலை கண்டு ஸ்டாலின் நடுங்குகிறார் என, சண்முகம் எம்.பி., கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தோடு செயல்படுகிறார். இதனால் தான் ஜெ., பல்கலையை ரத்து செய்துள்ளது இந்த அரசு. பல்கலைக்கு ஜெ., பெயரை வைப்பது பிரச்னையாக இருந்தால், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொதுவான அம்பேத்கரின் பெயரை வைக்கலாம் என கூறினோம். அந்த பெயரை கூட வைக்க தி.மு.க.,விற்கு மனமில்லை.
இங்குள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், 50 கல்லுாரிகளை திறந்துள்ளதாக பெருமையாக கூறுகிறார். எங்கு திறந்தீர்கள் என பட்டியல் போட்டு தாருங்கள். ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகத்தை மூடியதோடு, முதுகலை பட்ட மேற்படிப்பு மையத்தையும் அரசு மூடவுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்.
இந்த சூழலில், முதுகலை பட்ட மேற்படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கை பற்றி, ஸ்டாலின் அரசோ, உயர்கல்வி துறை அமைச்சரோ, அண்ணாமலை பல்கலைக்கழகமோ கூறவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த மையத்தை மூட முதல்வர் தான் உத்தரவிட்டுள்ளது தெரிகிறது.
திருக்கோவிலுார் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பொன்முடி இருந்தாலும் பட்ட மேற்படிப்பு மையம் மாணவர் சேர்க்கை பற்றி அக்கறையோடு முதல்வரிடம் பேசியுள்ளார். விழுப்புரம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ., எங்கு போனாரென தெரியவில்லை. இவருக்கு மக்கள் மீது அக்கறையில்லை. தேர்தலை கண்டு ஸ்டாலின் நடுங்கிறார். வரும் 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் விழுப்புரத்தில் ஜெ., பல்கலைக்கழகம் துவங்குவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது
இவ்வாறு அவர் பேசினார்.