/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் இன்று ஸ்டாலின் திட்ட முகாம்
/
மாவட்டத்தில் இன்று ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஜூலை 23, 2025 11:28 PM
விழுப்புரம்: மாவட்டத்தில், கோட்டக்குப்பம் நகராட்சி, காணை, திருவெண்ணெய்நல்லுார், மேல்மலையனுார் ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு :
கோட்டக்குப்பம் நகராட்சி, காணை ஒன்றியம், திருவெண்ணெய்நல்லுார், மேல்மலையனுார் ஒன்றியங்களில், இன்று திட்ட முகாம் நடக்கிறது.
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்னமுதலியார் சாவடி சமுதாய கூடத்தில் வார்டு எண், 4,5 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம். காணை ஒன்றியம், வெங்கடேசபுரம் எம்.டி., சேஷாத்திரி மகாலில் நடக்கும் முகாமில், கோனுார், பெரும்பாக்கம், தெளி, வி.கொத்தமங்கலம், வெண்மணியாத்துார் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு வழங்கலாம்.
திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், அரசூர் கீர்த்தி மண்டபத்தில் நடக்கும் முகாமில் காரப்பட்டு, அரசூர், இருவேல்பட்டு, பொய்கை அரசூர் ஊராட்சிகளுக்கும், மேல்மலையனுார் ஒன்றியம், அவலுார்பேட்டை ஆர்.ஏ.பி., மண்டபத்தில் நடக்கும் முகாமில் அவலுார்பேட்டை, குந்தாலம்பட்டு, கடப்பாநந்தல், வடுகபூண்டி ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

