/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஆக 07, 2025 02:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி கப்பூர், சக்திபட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம், தோகைப்பாடி கிராமத்தில் நடந்தது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'தமிழக அரசின் பல்வேறு துறை சேவைகள் ஒரே இடத்தில் மக்களை சென்றடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து மக்கள் பயன்பெறலாம் ' என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, சந்திரசேகர், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணை சேர்மன் உதயகுமார், மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய அவைத் தலைவர் கண்ணப்பன், துணை செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், பட்டு ஆறுமுகம், பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துசாமி, ஊராட்சி தலைவர்கள் பாலமுருகன், தனசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் தண்டபாணி, கிளைச் செயலாளர் கணேசன், நேதாஜி, சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.