/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 02, 2025 07:47 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
ராதாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்து பேசினார். ராதாபுரம், பகண்டை, வெட்டுக்காடு, கயத்துார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல் முருகன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் , மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ., வசந்தி, இளநிலை உதவியாளர் தமிழ்செல்வி, உதவி இயக்குனர்கள் ஜெய்சன், கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், அன்பரசி நீதி,ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனுவாசன், பொற்கலை பாபு, பானுமதி ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாரதி, பாலகிருஷ்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், தொழில் நுட்ப அணி சாம்பு, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், சக்திவேல், சபரி,அருண், அசோகன், சரவணன், ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.