/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 09, 2025 11:18 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., சையது முகமது, ஆத்மா குழு தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முகாமை துவக்கி வைத்து பேசினார். வேம்பி, நந்திவாடி, வேலியேந்தல், நரசிங்கனுார் பொதுமக்கள் அவரிடம், மனுக்களை கொடுத்தனர்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மண்டல துணை பி.டி.ஓ., சுந்தர்ராஜன், பாபு, உதவி இயக்குநர்கள் ஜெய்சன், கங்கா கவுரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, பாரதி, ஊராட்சி தலைவர்கள் தனலட்சுமி ரவி , சஹானா, முல்லைக்கொடி, பாக்கியநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிவேல், கவியரசன், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகமூர்த்தி, வேல்முருகன், திட்ட குழு சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

