/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஆக 15, 2025 11:00 PM

வானுார்,; வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விரைந்து விசாரித்து முடித்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்டத்தை வழங்க ஒன்றிய சேர்மன் அறிவுறுத்தினார்.
மாவட்ட கவுன்சிலர் பிரேமா குப்புசாமி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், துணைத் தலைவர் குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.