/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 20, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, நகராட்சி கமிஷனர் வசந்தி தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தொடங்கி வைத்தார். தாசில்தார் கனிமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் மனுக்களை பெற்றார்.
தி.மு.க., நகர செயலாளர் வெற்றிவேல் மற்றும் முக்கிய துறை அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில், விழுப்புரம் கீழப்பெரும்பாக்கம் பகுதி வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன், இலவச மனைப்பட்டா, அரசின் இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர்.