/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..
ADDED : ஆக 28, 2025 02:22 AM

வானுார்: வானுார் தாலுகா ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
ராவுத்தன்குப்பம், புளிச்சப்பள்ளம், ஆகாசம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்த இந்த முகாமிற்கு வானுார் பி.டி.ஓ., சுபாஷ் சந்திபோஸ், தாசில்தார் வித்யாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் உஷா முரளி, துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், இலவச மனைப்பட்டா, மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்டவை வேண்டி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் காமாட்சி வெங்கடேசன், ஜெயசங்கர், வசந்தா எல்லுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.