/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மனுக்கள் மீது தீர்வு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மனுக்கள் மீது தீர்வு
ADDED : ஜூலை 16, 2025 11:27 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மின் இணைப்பு பெயர் மாற்றம் உடனடியாக செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சியில், திட்ட முகாமினை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், எம்.எல்.ஏ., பொன்முடி துவக்கி வைத்தார்.
இதேபோல் விழுப்புரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் திட்டத்தின் கீழ், 20 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், உதவி மின்பொறியாளர் ரவீந்திரன் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.
இம்முகாமில், விண்ணப்பதாரர் ஒருவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து, அதற்கான கடிதம் வழங்கப்பட்டது.
வணிக ஆய்வாளர் ரமேஷ், கணக்கீட்டு ஆய்வாளர் பழனிவேல், உதவியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.