/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
கண்டாச்சிபுரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : செப் 27, 2025 02:14 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ பொன்முடி தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். ஆர்.டி.ஓ., முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் வரவேற்றார். அடுக்கம் மற்றும் கண்டாச்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
தாசில்தார் முத்து, கூடுதல் தாசில்தார் ஜெயலட்சுமி முகையூர் பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்தர், ஸ்ரீதர், முகையூர் ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஸ்வரன், அரசு ஒப்பந்ததாரர் ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி ஏழுமலை, ஊராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.