/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கண்டம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 08, 2025 11:50 PM

விழுப்புரம் : விழுப்புரம் தொகுதி கோலியனுார் ஒன்றியம், கண்டம்பாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.
தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், 'முதல்வரின் சிறப்பு திட்டத்தின் படி, அரசுத்துறை சேவைகள் ஓரே இடத்தில் கிடைக்கும் வகையில், இந்த முகாம்கள் நடக்கின்றன.
பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவர்கள் மனு அளித்து, பயன்பெறலாம்,' என்றார்.
தொடர்ந்து, முகாமை பார்வையிட்டு, வேளாண்துறை, சுகாதாரத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் கனிமொழி, கோலியனுார் ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ.க்கள் ஜெகநாதன், கார்த்திகேயன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சம்பத், துணை சேர்மன் உதயகுமார், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், ஞானவேல், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி மக்களண்பன், அயலக அணி துணை அமைப்பாளர் ஜனார்தனன், கிளை செயலர்கள் சீதாராமன், கலிவரதன், சந்திரன், நிர்வாகிகள் கார்த்திகேயன், கவுதம், ரகு, ரகுபதி, சுரேஷ், கலியமூர்த்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.