/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மிட்டாமண்டகப்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
மிட்டாமண்டகப்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 29, 2025 10:38 PM

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த மிட்டாமண்டகப்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமில் மிட்டாமண்டகப்பட்டு மற்றும் பள்ளிப் புதுப்பட்டு ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன். எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மனுக்களை பெற்று பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் வாசன், ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சீனுசெல்வரங்கம், செல்வமணி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் நதியா சுகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியன் வரவேற்றனர்.
ஒன்றிய அவைத் தலைவர் மோகன்தாஸ், துணைச் செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாலசுப்ரமணியம், சுரேஷ்குமார், வழக்கறிஞர் கோதண்டபாணி, தொல்காப்பியன், இளங்கோவன்.
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் குருமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பிரவின்குமார், நிர்வாகிகள் ஆனந்தராஜ், சந்திரசேகர், காசிநாதன், மலேசியன், கிளைச் செயலாளர்கள் தனஞ்செயன், முருகன், சரவணன், சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.