/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
மயிலம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 19, 2025 11:59 PM

மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ரெட்டணை ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமை, மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து தலைமை தாங்கி பேசினார்.
மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் கிஷோர் வரவேற்றார்.
மயிலம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் மகாலட்சுமி துவக்க உரையாற்றினார். அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாமில் நடத்தப்பட்டது. மேலும், 13 அரசுத்துறைகளின், 43 சேவைகள் முகாமில் வழங்கப்பட்டன.
முகாமில் உரிமைத்தொகை விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். இதில் தி.மு.க., வடக்கு மாவட்ட அவை தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ரெட்டணை வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் குமுதா உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.