/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 19, 2025 03:08 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சியில் 1 முதல் 7 வார்டுகளுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'தமிழக முதல்வர் மக்கள் நலனுக்காகவே மக்கள் குறைகளை தீர்க்க வேண்டி இந்த முகாம்கள் உங்கள் பகுதியில் நடைபெறுகிறது. இதன் மூலம் 46 திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.
மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறது. விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி நீண்ட கால கோரிக்கையான உழவர் சந்தையை கொண்டு வந்தது தி.மு.க., ஆட்சியில் தான்' என்றார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ேஷக் லத்தீப் வரவேற்றார். தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல்முருகன், இளநிலை உதவியாளர் ராஜேஷ், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ்.
வட்டார மருத்துவ அலுவலர் வினோத், உதவி இயக்குநர் ஜெய்சன்,பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், நகர செயலாளர் நைனாமுகமது.
நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாத், மாவட்ட தலைவர் அரிகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சிவா. பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், கனகா, சுதா, ஆனந்தி, வீரவேல், பிரியா மற்றும் 15 துறை சார்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.