ADDED : ஆக 06, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி 23, 28, 29 ஆகிய வார்டுகளுக்கான, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
விழுப்புரம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, கமிஷ்னர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, வார்டு செயலாளர் சண்முகம், நகர் மன்ற கவுன்சிலர்கள் புல்லட் மணி, சாந்தராஜ், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பாலு கார்த்திக், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த் ராஜ், விளையாட்டு அணி பிரவீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மோகன், தேவதாஸ், பாலன், ராஜேந்திரன், வெங்கட், விஜயகுமார், தமிழன், அருள், குட்டி சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.