ADDED : ஆக 14, 2025 11:41 PM

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் தொகுதி, கோலியனூர் ஒன்றியம், நன்னாடு ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பேசினார். தொடர்ந்து வேளாண்மை, சுகாதாரத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தாசில்தார் கனிமொழி, கோலியனுார் பி.டி.ஓ.,க்கள் ஜெகநாதன், கார்த்திகேயன், தி.மு.க, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தகரணி ஹரிராமன், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் பட்டு ஆறுமுகம், சிவக்குமார், ஊராட்சி தலைவர்கள் சொல்லின் செல்வம், தனசேகர், பாலமுருகன், சரஸ்வதி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து, சுரேஷ், சங்கர், பானாம்பட்டு முருகன், நகர இளைஞரணி மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணி மக்களன்பன், அயலக அணி ஜனா, கிளை செயலாளர்கள் சொல்லின்செல்வம், சேகர், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, துரைகண்ணு, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.