ADDED : அக் 03, 2025 11:32 PM

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 13, 14 மற்றும் 23வது வார்டுகளுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நேற்று நடந்தது.
நகராட்சி ஆணையர் புகேந்திரி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார். இதில், 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இதில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய மின்னணு குடும்ப அட்டை, ரேஷன் அட்டையில் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், பொறுப்பு அதிகாரி ரமேஷ் குமார், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் ரவிக்குமார், பொதுப்பணி மேற்பார்வையாளர் ஆரோக்கியம், கணக்காளர் அண்ணாமலை, மேலாளர் லட்சுமி, துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயஸ்ரீ சுகுமார், சுகுமார், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.