ADDED : அக் 15, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 31,38,39 ஆகிய வார்டு பகுதிகளுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், திருச்சி சாலை, பாலமுருகன் மண்டபத்தில் நடந்தது.
இந்த முகாமை நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி பிரபு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கவுன்சிலர்கள் சிவக்குமார், சங்கர், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார்கள் கனிமொழி, ஆனந்தன், நகராட்சி ஆணையர் வசந்தி, மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.