ADDED : ஆக 10, 2025 11:32 PM

விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு அனைத்து வகை உடல் பரிசோதனை, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகாலம், குழந்தை நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல் மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டனர்.
முகாமில் இணை இயக்குநர் ரமேஷ் பாபு, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, பொறியியல் கல்லுாரி இயக்குநர் செந்தில், செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.