ADDED : அக் 26, 2025 04:54 AM

வானுார்: விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், வானுார் அரசு கல்லுாரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் உஷா முரளி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், 17 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்பு நிபுணர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ், கல்லுாரி முதல்வர் வில்லியம், ஒன்றிய துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் கவுதம், பிரேமா குப்புசாமி, அன்புமணி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

