தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாநில விளையாட்டு போட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை

மாநில விளையாட்டு போட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை

மாநில விளையாட்டு போட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை


ADDED : செப் 23, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் விழுப்புரம் சரக ஊர்க்காவல் படை வீரர்கள் கோப்பைகள் வென்று சாதனைபடைத்தனர்.

தேனியில் ஊர்க்காவல் படையினருக்கான, 30வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் சரக ஊர்க்காவல் படை சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையில் வீரர்கள் பிரேம்நாத், ரவி, கணேஷ்குமார், தேவநாதன், ஆறுமுகம், சக்திவேல், சீனுவாசன், மூர்த்தி, ஏழுமலை, ஆதிசிவம், வசந்தகுமார், மோகனபிரியா, செல்வசுந்தரி, விஜயலட்சுமி உள்ளிட்ட, 110 பேர் தீயணைப்பு பிரிவு, ஓட்டப்பந்தயம், வாலிபால், கயிறு இழுத்தல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். 

இதில், கயிறு இழுத்தல் மற்றும் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் கோப்பை வென்று சாதனை படைத்தனர். வெற்றி வீரர்களை விழுப்புரம் சரக காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us