UPDATED : செப் 02, 2026 06:24 PM
ADDED : செப் 02, 2026 06:03 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் மாநில அளவிலான ஜூடோ இறுதி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம், புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று, 14 மற்றும் 17,19 ஆகிய வயதின் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில், ஆயிரம் மாணவிகள் பங்கேற்றனர்.
இன்று மாணவர்கள் பங்கேற்கும் போட்டி நடக்கின்றது. இதில் 1100 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு இறுதி போட்டி நாளை நடக்க உள்ளது.
ஏற்கனவே மாவட்ட அளவில் தேர்வு பெற்ற ஜூடோ வீரர், வீராங்கனைகள் திண்டிவனத்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இதில் வெற்றி பெறக்கூடிய மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெற உள்ள ஜூடோ போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்குகேற்க தகுதி பெறுவார்கள்.
