ADDED : ஏப் 24, 2026 08:20 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், 35வது மாநில அளவிலான சதுரங்க போட்டி விக்கிரவாண்டியில் நடந்தது.
சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 380 வீரர்கள் பங்கேற்றனர். ஓபன் பிரிவில் முதல் பரிசை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதேவ், இரண்டாம் பரிசை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் பிரஜித், மூன்றாம் பரிசை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாஸ்டர் ராகவ் ஆகியோர் வென்றனர்.
சிறுமியர் பிரிவில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா முதல் பரிசும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா இரண்டாம் பரிசும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பூஜாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்.
சர்வதேச சதுரங்க நடுவர் டாக்டர் சதிஷ் தலைமையிலான குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் பரிசும், சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், சர்வதேச சதுரங்க நடுவர் ரத்தினம் அனந்தராம், சூர்யா கல்லுாரி முதல்வர் டாக்டர் சங்கர், துணை முதல்வர் டாக்டர் ஜெகன் ஆகியோர் பங்கேற்று பரிசளித்தனர்.
நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழக கவுரவ தலைவர் அர்ச்சனா சுப்புராமன், சங்கத் தலைவர் ஓமணாகிருஷ்ணன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் வேணுகோபால், சம்பத், தசரதன், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், இணைச் செயலாளர் ஈஸ்வர்ராஜ், செயற்குழு உறுப்பினர் நாராயணன், ஸ்ரீசக்திவேல் முருகன் பங்கேற்றனர்.
