/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
/
மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
ADDED : மே 03, 2025 05:04 AM

விழுப்புரம் : மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.
தட்சசீலா பல்கலைக்கழகம் வேந்தர் தனசேகரன், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் கருத்தரங்கம் நடந்தது. மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
மயிலம் கல்விக்குழுமம் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
திண்டிவனம் தீயணைப்பு துறை அதிகாரி முரளி தலைமையிலான குழுவினர் தீயணைப்பு மேலாண்மை குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
மருத்துவ துறை வல்லுனர்கள் சிறப்புரையாற்றினர். முன்னதாக, ஜிப்மர் முதன்மை செவிலிய அதிகாரி தினகரன், இயற்கை சீற்றங்கள் குறித்து விளக்கினார்.
விழுப்புரம் மவாட்ட தொற்றாத நோய் திட்ட அலுவலர் டாக்டர் விவேகானந்தன், பேரழிவு மற்றும் அதன் மேலாண்மை முறைகள் பற்றி கூறினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. செயலாளர் பேற்றில் பிரியா நன்றி கூறினார்.