/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 28, 2025 07:07 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.
துணை பொதுச்செயலாளர் ஏழுமலை வரவேற்றார். பொதுச்செயலர்கள் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மணி, முன்னாள் மண்டல தலைவர் ராமதாஸ், செயலாளர் காளிதாஸ் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிப்படுத்தி முழுமையான ஒப்பந்த பலனை வழங்க வேண்டும். தனியார்மயத்தை கைவிட்டு, இ-பஸ், மினி பஸ்களை அரசே இயக்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் டி.ஏ., பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.