/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி
/
இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி
இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி
இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி
ADDED : டிச 09, 2024 04:47 AM

விழுப்புரம் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், இறந்த தொழிலாளர்கள் 8 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக, விழுப்புரம் மண்டலம் சார்பில், போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட நிதி வழங்கப்பட்டது.
விழுப்புரம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இறந்த தொழிலாளர்கள் 8 பேரின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர் நடேசன் ஆகியோர் வழங்கினர். விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.