/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தி புதுப்பிக்க நடவடிக்கை
/
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தி புதுப்பிக்க நடவடிக்கை
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தி புதுப்பிக்க நடவடிக்கை
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தி புதுப்பிக்க நடவடிக்கை
ADDED : மார் 24, 2025 04:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை தரம் உயர்த்தி புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள பழமையான ரயில்வே மருத்துவமனையை, படிப்படியாக தரம் குறைத்து, மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி, ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 5ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் ரயில்வே துணை கோட்ட மருத்துவமனையை, மூடும் திட்டம் இல்லை. இப்போதுள்ள மருத்துவமனை, அதே நிலையில் தொடர்ந்து சிறப்பாக இயங்கும். அனுபவம் மிக்க 2 டாக்டர்கள், ஊழியர்களுடன், லேப், எக்ஸ்ரே போன்றவையும் தடையின்றி செயல்படும்.
மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடக்கும். இப்போதுள்ள சேவையுடன், மேலும் மருத்துவமனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். சிறப்பு மருத்துவர்கள் விசிட், மகப்பேறு, எலும்பு முறிவு போன்ற சிறப்பு மருத்துவ சேவையும் நடக்க உள்ளது.
இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, உயிர் காக்கும் அவசர சிகிச்சையளிப்பதற்கும் அனைத்து வசதிகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும்.
விரைவில், அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதி போன்றவை கொண்டுவரப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களின் நலனிற்காக, இம்மருத்துவமனையை மேம்படுத்த நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.